ஜெட்டாவுக்கான விமானங்களை மார்ச் 28ஆம் தேதி வரை ரத்துசெய்த ஸ்கூட்

ஜெட்டாவுக்கான விமானங்களை மார்ச் 28ஆம் தேதி வரை ரத்துசெய்த ஸ்கூட்

1 mins read
09d79d4f-ad7b-4f9c-ad3c-08af1664b376
சிங்கப்பூருக்கும் ஜெட்டாவுக்கும் இடையிலான ஸ்கூட் விமானச் சேவைகள் மார்ச் 28ஆம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாகச் சிங்கப்பூருக்கும் ஜெட்டாவுக்கும் இடையிலான மேலும் பல விமானச் சேவைகளை மார்ச் 28ஆம் தேதி வரை ஸ்கூட் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

‘டிஆர்596’ வகை விமானச் சேவைகள் (சிங்கப்பூர் - ஜெட்டா), ‘டிஆர்597’ வகை விமானச் சேவைகள் (ஜெட்டா - சிங்கப்பூர்) ஆகியவை, மத்திய கிழக்கில் உள்ள புவிசார் அரசியல் நிலைமையால் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) மலிவு விலை விமான நிறுவனமான ஸ்கூட் அதன் இணையத்தளத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) தெரிவித்தது.

இதற்கு முன்னர், விமானச் சேவைகள் மார்ச் 6, 10 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மத்திய கிழக்கு வட்டாரத்திற்கான தனது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதிக்கும் மார்ச் 7ஆம் தேதிக்கும் இடையே மொத்தம் 26 எஸ்ஐஏ, ஸ்கூட் விமானச் சேவைகள் ரத்தானதாக மார்ச் 1ஆம் தேதி அறிவிப்பு வந்திருந்தது.

மார்ச் 5ஆம் தேதி, சிங்கப்பூர் - துபாய் இடையிலான விமானச் சேவைகளை மார்ச் 15ஆம் தேதி வரை ரத்து செய்வதாக எஸ்ஐஏ அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்