40,000 வெள்ளி கையாடல் செய்த ஸ்கூட் சிப்பந்தி

1 mins read
8bc8330b-3d25-4cde-918c-def374347a2e
லுக்மன் ஹகிம் ‌‌‌ஷாபாபி என்னும் அந்த 31 வயது ஆடவர் 366 முறை விற்பனைமூலம் கிடைத்த தொகையைக் கையாடல் செய்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்கூட் விமானத்தில் உணவு, பான விற்பனைமூலம் கிடைத்த கிட்டத்தட்ட 40,000 வெள்ளி ரொக்கத்தைச் சிப்பந்தி ஒருவர் கையாடினார்.

லுக்மன் ஹக்கிம் ‌‌‌ஷாஃபாவி என்னும் அந்த 31 வயது ஆடவர் 366 முறை விற்பனைமூலம் கிடைத்த தொகையைக் கையாடல் செய்தார்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் லுக்மன் ஈடுபட்டார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்ற்சாட்டுகளை லுக்மன் ஒப்புக்கொண்டார்.

2023ஆம் ஆண்டு, லுக்மன் உணவு,பான விற்பனைமூலம் கிடைத்த தொகையைச் சேமித்து வைக்கும் இரண்டு பைகளைத் தொலைத்துவிட்டார்.

அதுதொடர்பாக அவர் மூத்த அதிகாரிகளிடம் சொல்லவில்லை. மூத்த அதிகாரிகளும் பை குறித்து எதுவும் கேட்கவில்லை. இதையடுத்து, லுக்மன் குற்றச் செயலைத் தொடங்கினார்.

கையாடிய பணத்தைக் கொண்டு லுக்மன் தனது கடனை அடைத்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தநது குற்றத்தைத் தானாக முன்வந்து லுக்மன் ஒப்புக்கொண்டார். அதையடுத்து, ஸ்கூட் நிறுவனம் காவல்துறையிடம் புகார் கொடுத்தது. பின்னர் லுக்மன் கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி 3ஆம் தேதி லுக்மனுக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்