கனடாவின் வான்கூவர் நகருக்கான நேரடி விமானச் சேவையை நிறுத்தப்போவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகருக்கான சேவையை ஸ்கூட் நிறுத்தவிருக்கிறது.
வான்கூவருக்கான சேவை அக்டோபர் மாதத்தில் இருந்தும் கோல்டு கோஸ்டுக்கான சேவை ஜூலை மாதத்தில் இருந்தும் நிறுத்தப்படும்.
ஆஸ்திரேலியாவுக்கான விமானச் சேவைகள் மிக முக்கியமானவை என்றும் தேவைக்கு ஏற்ப விமானச் சேவைகளின் திட்டங்கள் மாற்றப்படும் என்றும் ஸ்கூட் தெரிவித்தது.
தற்போது ஸ்கூட் விமானங்கள் சிங்கப்பூரில் இருந்து மெல்பர்னுக்கும் சிட்னிக்கும் வாரம் 10 முறை சேவைகளை வழங்கி வருகின்றன.
அடுத்த மாத இறுதியில் இருந்து பெர்த் நகருக்கு வாரம் 12 முறை விமானச் சேவை வழங்கப்படவுள்ளது.
சீனாவிற்கான விமானச் சேவைகளையும் ஸ்கூட் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

