சீனாவிற்கு வாரம் 57 விமானச் சேவைகள் - ஸ்கூட்டின் புதிய திட்டம்

சீனாவிற்கு வாரம் 57 விமானச் சேவைகள் - ஸ்கூட்டின் புதிய திட்டம்

1 mins read
aa448982-9939-4918-8841-57a4ffa2d730
2022 ஜூன் 2ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், சாங்கி விமான நிலையத்தில் காணப்படும் ஸ்கூட் விமானங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மலிவு விலை விமானச் சேவைகள் வழங்கும் ஸ்கூட், சீனாவிற்கான விமானச் சேவைகளை அதிகரிக்கவுள்ளது.

ஜூன் மாதத்திற்குள் வாரம் 57 விமானச் சேவைகளை சீனாவிற்கு வழங்க ஸ்கூட் திட்டமிட்டுள்ளது.

தற்போது அது வாரம் 14 விமானச் சேவைகளை வழங்குகிறது.

கொள்ளை நோய்க்கு முந்திய பயணச் சேவை அளவில் 50 விழுக்காடை ஜூன் மாதத்திற்குள் எட்ட ஸ்கூட் எண்ணம் கொண்டுள்ளது.

கொவிட்-19க்கு முன்னர் வாரம் 107 விமானச் சேவைகளை சீனாவுக்கு வழங்கியது ஸ்கூட்.

அண்மையில் சீனா அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளை அகற்றி எல்லைகளைத் திறந்தது. அதனால் இப்போது அந்நாட்டில் மீண்டும் விமானப் பயணங்கள் சூடுபிடித்துள்ளன.

முதற்கட்டமாக ஸ்கூட் ஏப்ரல் மாதம் முதல் சீனாவிற்கு 42 விமானச் சேவைகளை வழங்கவுள்ளது.