சிங்கப்பூர் ஏர்லைன்சும் அதன் கீழ் செயல்படும் மலிவு விலை விமான சேவை வழங்கும் ஸ்கூட் நிறுவனமும் பல்லாயிரக்கணக்கான விமானச் சீட்டுகளை தள்ளுபடி விலையில் விற்கவுள்ளன.
அக்டோபர் 25ஆம் தேதி முதல் அந்த விற்பனை தொடங்குகிறது. ஐரோப்பா, ஆசியாவில் உள்ள பல நகரங்களுக்கு அதன்மூலம் குறைந்த விலையில் விமானச்சீட்டுகள் வாங்கலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஸ்கூட் நிறுவனமும் புதன்கிழமை தெரிவித்தன.
தள்ளுபடி விலையில் 420,000க்கும் அதிகமான பயணச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. அவற்றை இணையம் வழியாக வாங்கலாம் அல்லது சன்டெக்கில் நடக்கும் மூன்று நாள் விற்பனை நிகழ்ச்சியிலும் வாங்கலாம் என்று நிறுவனங்கள் கூறின.
தள்ளுபடி விலையில் விற்கப்படும் ஸ்கூட் விமானச் சீட்டுகளை இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான பயண காலத்திற்கு வாங்கலாம்.
தள்ளுபடி விலையில் விற்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சீட்டுகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பயண காலத்திற்கு வாங்கலாம்.
கிட்டத்தட்ட 130 நகரங்களுக்கு இந்த தள்ளுபடி விலை பொருந்தும்.
இந்த தள்ளுபடி விற்பனை நவம்பர் 7ஆம் தேதி வரை இணையத்தில் நடக்கும்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் அக்டோபர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் 401, 402 அறைகளில் விற்பனை நடக்கிறது.