தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்முனைப் போட்டியைத் தவிர்க்கும் முயற்சியில் தோல்வி

1 mins read
7417bf8f-975f-41d6-8297-00466c6a91b1
செம்பவாங் குழுத்தொகுதியிலும் புதிதாக உருவாக்கப்பட்ட செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியிலும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும், செம்பவாங் குழுத்தொகுதியில் மும்முனைப்போட்டியைத் தவிர்ப்பதற்கான உடன்பாட்டை எட்டத் தவறியுள்ளன.

ஏப்ரல் 8ஆம் தேதியன்று நடைபெற்ற அந்தச் சந்திப்பின்போது, பன்முனைப் போட்டியைத் தவிர்க்க ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் போட்டியிடும்படி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தங்களிடம் கேட்டதாகத் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மனைவியரை மாற்றிக்கொள்ள கேட்பது போலச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியினரின் வேண்டுகோள் இருப்பதாகத் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங், உட்லண்ட்ஸ் அவென்யூ 6லுள்ள புளோக் 768ல் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.

“எங்கள் கட்சியின் உண்மைத்தன்மைக்கும் செம்பவாங் குழுத்தொகுதியிலும் செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியிலும் நாங்கள் செய்துள்ள வேலையின் மதிப்புக்கும் எதிரான இத்தகைய வேண்டுகோளை என்னால் ஏற்க முடியவில்லை,” என்று திரு இங் கூறினார்.

செம்பவாங் குழுத்தொகுதியிலும் புதிதாக உருவாக்கப்பட்ட செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியிலும் திரு இங்கின் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் சுவான், புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வந்தார். அந்தத் தொகுதி, தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டதை அடுத்து திரு சீ, செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியிலும் போட்டியிட எண்ணுகிறார்.

குறிப்புச் சொற்கள்