சாங்கி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகிலிருந்து கடலுக்குள் விழுந்த ஒருவரைத் தேடும் பணி தொடர்கிறது.
இது குறித்து சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்துக்கு திங்கட்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) பின்னிரவு 12.20 மணிக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆணையமும் கடலோரக் காவல் படையும் அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், அவ்வழியே செல்லும் கப்பல்கள் கடலில் எவரேனும் தென்படுகின்றனரா என கண்காணிக்கும்படி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.