தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிலேத்தார் விரைவுச்சாலையில் விபத்து; லாரி ஓட்டுநர் கைது

1 mins read
0846c5b5-0eb0-4b88-8833-78df203f4e3a
இந்த விபத்து குறித்து தங்களுக்கு நவம்பர் 18ஆம் தேதி இரவு சுமார் 8.05 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.  - படம்: TRAFFICACCIDENTSG/ இன்ஸ்டகிராம்

கவனக்குறைவாக கனரக லாரியை ஓட்டி, மோட்டார்சைக்கிள்மீது மோதி விபத்தை ஏற்[Ϟ]படுத்திய 32 வயது ஆடவர் திங்கட்கிழமை (நவம்பர் 18) கைது செய்யப்பட்டார்.

இந்த விபத்தில் 23 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்து வந்த 32 வயது ஆடவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது இருவரும் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் அவென்யூ [Ϟ]2க்கு வெளியே புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்[Ϟ]சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து தங்களுக்கு நவம்பர் 18ஆம் தேதி இரவு சுமார் 8.05 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மோட்டார் சைக்கிள் ஒன்று நொறுங்கிக் கிடப்பதையும் தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் அதன் அருகே படுத்திருப்பதையும் ‘Singapore roads accident.com’ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளியில் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்