தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பகுதி மின்கடத்தி, மின்னணுவியல் துறைகள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்: அமைச்சர் சீ

2 mins read
26f9a5a8-74aa-4377-8100-e62e4380adb2
தொழில் மாற்றத் திட்டங்கள் மூலம் 2,700க்கும் மேற்பட்ட பணியிடை காலத்தில் உள்ள நிபுணர்கள் பகுதி மின்கடத்திப் பணிகளில் மீண்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மின்சார வாகனங்கள், மேம்பட்ட கணினிக்கான அதிக சக்திவாய்ந்த சில்லுகளுக்கான தேவை ஆகியவை அதிகரித்து வருவதால், சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தி மற்றும் மின்னணுத் துறை துடிப்புடனும் புத்தாக்கத்திறனுடனும் திகழவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது சிங்கப்பூர் தொழில்நுட்ப மாற்றத்தின் அலையில் சிக்கிக் கொள்ளாமல், அதில் பயணம் செய்ய உதவும். மேலும் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் பாதுகாப்பான, நம்பகமான முனையாக போட்டித்தன்மையுடன் இருக்க உதவும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் செப்டம்பர் 24ஆம் தேதி தெரிவித்தார்.

“உலகளாவிய பகுதி மின்கடத்தித் துறை தேவையில் ஓர் எழுச்சியை சந்தித்து வரும் அதே வேளையில், அது விரைவான தொழில்நுட்பச் சீர்குலைவையும் எதிர்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

“அதிக ஆற்றல் திறன், அதிக சக்தி அடர்த்தியை வழங்கும் பரந்த ‘பேண்ட்கேப்’ பகுதி மின்கடத்திகளின் எழுச்சியுடன், இந்தத் தொழில்துறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் நடைபெற்ற சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி தொழில்துறைச் சங்கத்தின் உச்சநிலை மாநாட்டில் பேசிய திரு சீ, இந்தத் துறை இந்த சவால்களைச் சமாளிக்க திறன்களை வளர்த்து தனது ஊழியரணியை உருவாக்கும் செயலைத் தொடர வேண்டும் என்றார்.

“தொழிற்சாலைத் தளத்தில் உள்ள ஊழியர் முதல் அடுத்த சில்லு வடிவமைப்பை உருவாக்கும் பொறியாளர் வரை நமது மக்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

“பகுதி மின்கடத்தி மற்றும் மின்னணுவியல் தொழில்துறை முன்னணித் துறைகளில் ஒன்றாகும். அர்த்தமுள்ள தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை இது வழங்குகிறது. இது பணியிடை காலத்தில் உள்ள நிபுணர்களுக்குப் புதிய திறன்களை மறுசீரமைக்கவும், வளர்க்கவும், புதிய பதவிகளில் செழிக்கவும் வாய்ப்பளிக்கிறது,” என்றும் திரு சீ எடுத்துரைத்தார்.

மாணவர்களை இந்தத் துறைக்கு ஈர்ப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி தொழில்துறைச் சங்கம் ஏற்கெனவே பிரசாரங்களை நடத்தி வருவதாகவும், பல்வேறு திட்டங்கள் மூலம் பொறியாளர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்குப் பயிற்சி அளித்து வளர்ப்பதாகவும் திரு சீ குறிப்பிட்டார்.

“திறமையை வளர்ப்பதிலும் பணியாளர்களை வளர்ப்பதிலும் முதலீடு செய்வது உட்பட, இந்தத் துறையை ஆதரிப்பதற்காக சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி தொழில்துறைச் சங்கத்துடன் அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றும்,” என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்