செங்காங் பேருந்து நிறுத்தத் தாக்குதல்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

செங்காங் பேருந்து நிறுத்தத் தாக்குதல்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
வெளிநாட்டு சின்னத்துடன் தொப்பி அணிந்தவருக்குக் காவல்துறை எச்சரிக்கை
b434f929-b453-4deb-b6a3-e11e32b37207
குற்றஞ்சாட்டப்பட்ட முகம்மது அஷ்ரஃப் சையது, நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) முன்னிலைப் படுத்தப்பட்டார் . - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செங்காங்கில் உள்ள ரிவர்வேல் டிரைவில் இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில், இஸ்ரேலிய சின்னத்துடன் தொப்பி அணிந்திருந்த அடையாளம் தெரியாத நபரைத் தாக்கியவர்மீது வியாழக்கிழமை (ஜூன் 4) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

முகம்மது அஷ்ரஃப் சையது என்ற அந்த 40 வயது ஆடவர், ஏலன் சிம் என்ற 55 வயது நபரை 2025ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி இரவு 10.40 மணியளவில் தாக்கினார்.

வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றச்சாட்டு அஷ்ரஃப் மீது சுமத்தப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணையில் அஷ்ரஃப், அந்த ஆடவர் அணிந்திருந்த தொப்பியை பறித்த பிறகு, தாக்குதலைத் தொடங்கினார் என்று அறியப்படுகிறது.

அஷ்ரஃப், அந்த ஆடவரைக் குத்தியதோடு உதைத்தும் காயப்படுத்தியதால், ஏலனுக்கு முகத்திலும் முன்கையிலும் காயங்கள் ஏற்பட்டன. வயதில் மூத்தவரான ஏலன் சிம், பிறகு மருத்துவ உதவியை நாடியுள்ளார்.

தொப்பி அணிந்தவருக்கு எச்சரிக்கை

இதற்கிடையில் பொது இடத்தில் வெளிநாட்டுத் தேசியச் சின்னத்தைக் காட்சிப்படுத்திய குற்றத்துக்கான சட்ட நடவடிக்கையின் அங்கமாக, ஏலன் சிம்முக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்