சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவைப் பறைசாற்றும் வகையில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை ஒசாகாவுக்கும் தோக்கியோவுக்கும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இருநாடுகளுக்கும் இடையிலான உச்சநிலைப் பரிமாற்றங்களை உறுதிப்படுத்தும் வகையிலும் நீண்டகால உறவை வலுப்படுத்தும் வகையிலும் திரு லீயின் பயணம் அமையும்.
ஒசாகாவின் எக்ஸ்போ 2025ல் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டங்களில் மூத்த அமைச்சர் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
எக்ஸ்போ 2025, அனைத்துலக அளவில் மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உலக நாடுகளில் உள்ள மக்களையும் புத்தாக்கங்களையும் ஒன்றுதிரட்டுகிறது.
‘ட்ரீம் ஸ்பியர்’ என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் கூடத்தில் சிங்கப்பூரின் கதையும் புத்தாக்க உணர்வும் காட்சிப்படுத்தப்படும்.
மூத்த அமைச்சர் லீக்கு ‘கிரேண்ட் கோர்டன் ஆஃப் த ரைசிங் சன்’ (Grand Cordon of the Order of the Rising Sun ) விருதும் வழங்கப்படும்.
திரு லீ, ஜப்பானியப் பிரதமர் இஷிபா ஷிகெருவையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1875ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘கிரேண்ட் கோர்டன் ஆஃப் த ரைசிங் சன்’ விருது ஜப்பானுக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்த ஒருவரைக் கௌரவிக்க வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அது ஆக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

