அங் மோ கியோ வட்டாரவாசிகளுக்கு நன்றி சொன்ன மூத்த அமைச்சர் லீ

2 mins read
746f82f0-fca1-4fc0-9a6c-639594232e38
அங் மோ கியோ குழுத்தொகுதியில் வெற்றிபெற்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் அணிக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாட கூரையில்லா பேருந்தில் உலா சென்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குக்கும் அவரது அணிக்கும் அங் மோ கியோ குடியிருப்பாளர்கள் (மே 4) உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பில் களமிறங்கிய மூத்த அமைச்சர் லீயின் அணி 78.95% வாக்குகளை வென்றது.

திரு லீயுடன் திரு டெரில் டேவிட், திருவாட்டி நாடியா அகம்மது சம்டின், திருவாட்டி ஜெஸ்மின் லாவ், திரு விக்டர் லாய், கெபுன் பாரு தனித்தொகுதியின் திரு ஹென்றி குவெக், இயோ சூ காங் தனித்தொகுதியின் திரு யிப் ஹொன் வெங், ஜாலான் காயு தனித்தொகுதியின் திரு இங் சீ மெங் ஆகியோரும் பேருந்தில் வெற்றி உலா சென்றனர்.

மக்கள் செயல் கட்சியின் டெக் கீ கிளை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேருந்துடன் சிங்க நடன, கடல்நாக நடனக் குழுக்களும் சேர்ந்துகொண்டன.

வெற்றி உலாவின்போது சிங்க நடனத்தையும் கடல்நாக நடனத்தையும் மக்கள் கண்டு களித்தனர்.
வெற்றி உலாவின்போது சிங்க நடனத்தையும் கடல்நாக நடனத்தையும் மக்கள் கண்டு களித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்களிடம் பேசிய மூத்த அமைச்சர் லீ, “நாங்கள் சிறந்ததைச் செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்,” என்றார். 

“உங்களுடன் இணைந்து கடினமாக உழைக்க வாக்குறுதி அளிக்கிறோம்.

“அங் மோ கியோ வட்டாரத்தையும் சிங்கப்பூரையும் இனி வரும் ஆண்டுகளுக்குச் சிறப்பானதாக்க நீங்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து இணக்கமாகச் செயலாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு எதிராக களமிறங்கிய சிங்கப்பூர் ஐக்கிய கட்சிக்கு 10.84% வாக்குகளும் மக்கள் சக்தி கட்சிக்கு 10.21% வாக்குகளும் கிடைத்தன.

கெபுன் பாரு தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 68.5% வாக்குகளையும் இயோ சூ காங் தனித்தொகுதியில் 78.73% வாக்குகளையும் வென்றன.

மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் மூத்த அமைச்சர் லீ.
மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் மூத்த அமைச்சர் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்