தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தமிழ் மொழி விழா

1 mins read
4371f0e2-f317-4e99-a6ee-87a2ef4d3b05
மாணவர்களுக்கான தமிழ் மொழிப் போட்டிகளுடன் தமிழ் மொழி விழாவைக் கொண்டாடிய நீ சூன் லிங்க் சமூக மன்ற இந்தியர் நற்பணிக் குழு. - படம்: நீ சூன் லிங்க் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

மாணவர்களுக்கான தமிழ்மொழிப் போட்டிகளுடன் நீ சூன் லிங்க் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, தமிழ்மொழி விழாவைக் கொண்டாடியது.

நார்த் வியூ தொடக்கப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

காலை 9 மணிக்கு வரவேற்பு நடனத்துடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் நீ சூன் லிங்க் குழுத் தொகுதியின் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் டெரிக் கோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் .

போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

பகல் 2 மணி வரையில் நடைபெற்ற விழாவில் பெற்றோர், மாணவர்கள், பார்வையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நீ சூன் லிங்க் குழுத் தொகுதியில் 2016 முதல் இந்தியர் நற்பணிச் செயற்குழுவினரால் தமிழ்மொழி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்