சிங்கப்பூரில் தங்கள் வங்கிக் கணக்குகளைக் குற்றக் கும்பல்களிடம் அதிகபட்சமாக $500க்கு விற்றதாக அல்லது வாடகைக்கு விட்டதாக எழுவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டது, அனுமதியில்லாமல் கணினியில் உள்ள தகவல்களைப் பெற்றது உள்ளிட்ட பணமோசடி தொடர்பான பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 17 முதல் 32 வயது வரையிலான நான்கு ஆடவர்களும் மூன்று பெண்களும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர்.
தங்களின் தானியக்கப் பண இயந்திர அட்டைகளையும் இணைய வங்கி விவரங்களையும் குற்றக் கும்பல்களிடம் கொடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் கூறினர்.
ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
அனுமதியின்றி கணினியில் உள்ள தகவல்களைப் பெற உதவியதற்கான குற்றத்திற்கு, ஈராண்டுவரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

