இரண்டு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துகள், ஒரு கார், நடையர் ஒருவர் தொடர்புடைய விபத்தில் மூன்று வயதுக் குழந்தை உட்பட எழுவர் காயமுற்றனர்.
பிடோக் சவுத் அவென்யூ 1ஐ நோக்கிச் செல்லும் மரின் பரேட் சாலையில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் இவ்விபத்து நிகழ்ந்தது. மூன்று முதல் 73 வயதிற்குட்பட்ட ஆறு பயணிகளும் 72 வயது நடையரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

