ஏழு உள்ளூர் காய்கறிப் பண்ணைகள், பாசிர் பாஞ்சாங் ஒட்டுமொத்த விற்பனை நிலையத்தில் இருக்கும் ஒட்டுமொத்த விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
அந்தப் பண்ணைகளில் விளையும் காய்கறிகளை கூடுதலானோருக்கு விநியோகிப்பது இந்நடவடிக்கையின் நோக்கமாகும். குறிப்பாக உணவுச் சேவை வழங்குவோர் (caterers), உணவு உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு உணவு விநியோகிப்பதற்கு இது பொருந்தும்.

