பாலர் பள்ளியில் சமையல்காரராக வேலை செய்த ஆடவர் மூன்று பெண் பிள்ளைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்குப்பட்ட பிள்ளைககள் ஒன்று மற்றும் இரண்டு வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
பிள்ளைககளுக்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை டியோ குவான் ஹூவாட் என்னும் 61 வயது ஆடவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
டியோமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆடவருக்கு 10 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
“குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தால் அவற்றை அவர்கள் வெளியே சொல்லமாட்டார்கள் என்று நினைத்துக் குற்றம் செய்தேன்,” என்று டியோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டியோ மலேசியக் குடிமகன், அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி வைத்துள்ளார்.
டியோ குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள்மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பின்னர் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் டியோமீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பாலர் பள்ளியின் பெயரும் பிள்ளைகளின் பெயரும் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
குற்றவாளிக்கு வரும் நவம்பர் 10ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

