சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; ஆடவருக்குச் சிறை

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; ஆடவருக்குச் சிறை

1 mins read
c90c4f21-449a-45a4-915f-5db2ae6a57cc
28 வயதான கெவின் டான் ஜியா ஹட் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு எட்டு ஆண்டுகள், ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

28 வயதான கெவின் டான் ஜியா ஹட் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தண்டனை விதிக்கப்பட்டது.

இணையவழி நட்பாகப் பழகி சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் கெவின். அப்போது அவருக்கு 25 வயது.

2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் சிறுமியுடன் கெவின் பழகியுள்ளார். ஜூன், ஜூலை மாதங்களில் குற்றச் செயல் நடந்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாலியல் வன்கொடுமை தொடர்பாகச் சிறுமி அவரின் தாயிடம் சொன்னார். அதையடுத்து அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப் பிறகு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி கெவின் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்