விமானப் பணியாளரிடம் பாலியல் தொல்லை: இந்திய ஆடவர்மீது குற்றச்சாட்டு

விமானப் பணியாளரிடம் பாலியல் தொல்லை: இந்திய ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
e89aad97-0295-4e94-9fdc-72a8acc90fca
இந்தச் சம்பவம் குறித்துத் தங்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 4:27 மணிக்குத் தகவல் கிடைத்ததாகத் திங்கட்கிழமை (மார்ச் 16) காவல்துறை தெரிவித்தது.  - படம்: பிக்சாபே

விமானப் பயணத்தின்போது பெண் விமானப் பணியாளர் ஒருவரை மானபங்கம் செய்ததோடு, அவருக்குத் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது இந்திய நாட்டவர்மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தங்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 4:27 மணிக்குத் தகவல் கிடைத்ததாகத் திங்கட்கிழமை (மார்ச் 16) காவல்துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் பணியாளர், குற்றம் சாட்டப்படவுள்ள நபரின் இருக்கைக்கு அருகில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் அவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அந்த நபரை எச்சரித்துவிட்டு, விமானம் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அந்தப் பணியாளர் சென்றார். ஆனால், அந்த நபர் அவரைப் பின்தொடர்ந்து சென்று, வழிமறித்துத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அச்சம்பவம் குறித்துத் தனது மேற்பார்வையாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த பின்னரே, அந்த நபர் மீண்டும் தனது இருக்கைக்குத் திரும்பியதாகச் சொல்லப்பட்டது.

விமானப் பயணிமீது குற்றம் சாட்டப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்