பள்ளி ஆசிரியருக்குக் கல்வி உதவியாளராகப் பணியாற்றிய ஆடவர் ஒருவர் 11 வயது மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
25 வயதான அந்த ஆடவர்மீது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர், பள்ளியின் விவரங்களை வெளியிடப்படவில்லை.
முதல் சம்பவம் 2025ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி நடந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளியில் உள்ள அறை ஒன்றில் சிறுவனிடம் கல்வி உதவியாளர் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளியில் இருந்த மாணவரிடம் ஆடவர் மீண்டும் தகாத முறையில் நடந்துகொண்டார்.
வழக்கு, செப்டம்பர் 24ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
மானபங்கக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவை அனைத்தும் ஒன்று சேர்த்து விதிக்கப்படலாம்.


