இரண்டு சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆடவருக்கு இரண்டு ஆண்டு, எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வயது எட்டு மற்றும் 11 ஆகும். இருவரையும் வெவ்வேறு நேரங்களில் பலமுறை ஆடவர் சீண்டினார்.
சிறுவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தவர் 22 வயது சிங்கப்பூரர் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த ஆடவர் எட்டு வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தபோது காணொளியும் எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் ஆடவர் வசித்த புளோக்கில் வசிப்பவர்கள்.
இச்சம்பவங்கள் 2022, 2023ஆம் ஆண்டுகளில் நடந்தன. அப்போது குற்றவாளிக்கு 20 வயது.
2023 ஏப்ரல் 27ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளால் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவரிடம் இருந்த இரண்டு கைப்பேசிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை தரும் காணொளிகள் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
ஆடவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற விசாரணையின்போது ஆடவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், அதற்கும் பாலியல் குற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆடவர் செய்த குற்றம் பெரிது, அவர் இளையராக இருப்பதால் தண்டனையைக் குறைக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
சிறுவர்களின் அடையாளத்தைக் காக்கும் விதமாக குற்றவாளியின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.
தற்போது ஆடவர் $20,000 பிணையில் உள்ளார். அவர் அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் தமது சிறைத் தண்டனையைத் தொடங்குவார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.