சிறுவருடன் பாலியல் குற்றம்: 70 வயது முதியவருக்கு ஆறு ஆண்டு ஏழு மாதச் சிறை

சிறுவருடன் பாலியல் குற்றம்: 70 வயது முதியவருக்கு ஆறு ஆண்டு ஏழு மாதச் சிறை

1 mins read
விசாரணையில் முதியவரிடம் பாலியல் சார்ந்த மோசமான படங்களும் சிறுவர்கள் வதைபடும் காணொளிகளும் கண்டறியப்பட்டன
7786ee3d-1688-4c43-bb11-fa7f0fc9c1c4
சிறுவனுடன் செய்த பாலியல் நடவடிக்கைகளை முதியவர் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். - மாதிரிப்படம்: அடோபி ஸ்டாக்

சிறுவனுடன் புரிந்த பாலியல் குற்றங்களுக்கும், பல குழந்தைகள் சார்ந்த தகாத புகைப்படங்கள், காணொளிகள் வைத்திருந்த குற்றத்துக்கும் 70 வயது முதியவருக்கு புதன்கிழமை (ஏப்ரல் 15) ஆறு ஆண்டு பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டாங் சியோக் சாய் என்ற அந்த ஆடவர் சிறுவனிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டது, குழந்தைகள் வதைபடும் தரவுகளை வைத்திருந்தது, அவ்வாறான உள்ளடக்கங்களைத் தயாரித்தது ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டார். இவைபோன்ற நான்கு வேறு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன. அவருக்குப் பிணைத்தொகையாக $25,000 அறிவிக்கப்பட்டது. குற்றவாளி குறித்து 2021 ஆகஸ்ட் மாதம் முதல் புகார் அளிக்கப்பட்டது.

13 வயது நிரம்பிய தனது மகனுடன் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்ற அவனது தாயார் அந்த முதியவர் பாலியல் குற்றங்களை தமது மககனுக்குச் செய்ததாகப் புகார் அளித்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதியவர் கைது செய்யப்பட்டார்.

முதியவரை விசாரித்தபோது அவரிடம் இருந்து பல மின்சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 226 பாலியல் சார்ந்த மோசமான படங்களும் சிறுவர்கள் வதைபடும் காணொளிகளும் கண்டறியப்பட்டன. அக்காணொளிகளில் 62 பதிவுகள் பாதிக்கப்பட்ட சிறுவன் தொடர்பானவை.

குறிப்புச் சொற்கள்