தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவருடன் பாலியல் உறவு; ஆசிரியைமீது குற்றச்சாட்டு

1 mins read
bdb3e9cb-8672-45f8-80fe-123fd1c34544
கார்ப்பேட்டை சம்பவத்தில் மாணவரிடம் ஆசிரியை தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்த வயது மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியை ஒருவர்மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் 13க்கும் 14க்கும் இடைப்பட்ட வயதில் உள்ள மாணவருடன் அவர் தகாத உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

மொத்தம் அவர் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஆனால் மாணவரின் நலன்கருதி 34 வயது ஆசிரியரின் பெயரை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது குற்றச்செயல் ஒரே ஒரு மாணவருடன் சம்பந்தப்பட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

ஜூலை 9ஆம் தேதி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கார்ப்பேட்டையில் குறைந்தது இரண்டு சம்பவங்களில் மாணவரிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அதே ஆண்டில் பிப்ரவரி 20க்கும் அக்டோபர் 8க்கும் இடையில் காரில் மாணவரை ஆசிரியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அநாகரீகமாகக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்