‘பெப்பர் சிக்கன் பேட்டிஸ்’ உணவுப் பொட்டலங்களை மீட்டுக்கொள்ள உத்தரவு

‘பெப்பர் சிக்கன் பேட்டிஸ்’ உணவுப் பொட்டலங்களை மீட்டுக்கொள்ள உத்தரவு

1 mins read
1496c45c-5e14-433f-b657-9eef279709d8
பிபிக்ஸ் சாய்ஸ்சின் ‘பெப்பர் சிக்கன் பேட்டிஸ்’ தொகுப்பில் ஒவ்வாமை ஏற்படுத்தும் முட்டை காணப்பட்டதால் அதனைத் திரும்பப் பெறும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு / ஃபேஸ்புக்

பிபிக்ஸ் சாய்ஸ் நிறுவனத்தின் ‘பெப்பர் சிக்கன் பேட்டிஸ்’ உணவுப் பொட்டலத்தில் குறிப்பிடப்படாத ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள் காணப்பட்டதால் அதனைத் திரும்பப்பெறும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது.

இது குறித்த அறிவிப்பை அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

முட்டையிலிருக்கக்கூடிய அந்த ஒவ்வாமைப்பொருள் காணப்படும் உணவுப் பொட்டலங்களை மீட்டுக்கொள்ளும்படி அதன் இறக்குமதியாளரான ‘சின் லி-ஹின் ஃபுரோசன் ஃபுட்’ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், திரும்பப் பெறும் பணி விரைவாக நடந்து வருவதாக அது குறிப்பிட்டது.

பொதுவாக, முட்டைகள் மக்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாது. முட்டையிலிருந்து வரும் வாசனை பிடிக்காதவர்களுக்கும் ஒவ்வாமை உள்ளவர்களுக்குச் சில நேரம் இதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் என அது மேலும் குறிப்பிட்டது.

இந்தத் தயாரிப்பை ஒவ்வாமை உள்ள பயனீட்டாளர்கள் உட்கொள்ள வேண்டாம் என்றும் இந்தத் தயாரிப்பில் ‘முட்டை’ கலந்திருப்பது தெரியாமல் அவர்கள் உட்கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் அந்த அமைப்பு பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஏதேனும் ஐயமிருப்பின் பயனீட்டாளர்கள் தாங்கள் இந்தத் தயாரிப்பை வாங்கிய கடையுடன் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்