சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 60 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நமது நாடு எவ்வாறு எதிர்பார்ப்புகளையும் மீறி எதிர்காலத்துக்கு திட்டமிட்டது பற்றிய நினைவலை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
நிலா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த விழா கொண்டாட்டங்களில் சனிக்கிழமை பங்கேற்றுப் பேசிய பிரதமர், சிங்கப்பூர் தனது மக்களின் ஒட்டுமொத்த வலிமையால் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்றார். எனினும், 60 ஆண்டுகள் என்பது ஒரு நாட்டின் வரலாற்றில் குறுகிய காலம் என்றும் நாம் தொடர்ந்து செல்ல வேண்டிய பாதை நீளமான ஒன்று என்றும் அவர் விளக்கினார்.
“ஆதலால், எஸ்ஜி60 கொண்டாட்டம் நாம் நடந்து வந்த பாதையின் ஒரு நினைவலை, அதற்காக நாம் பெற்றிருக்கும் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் தருணம் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், அது எதிர்காலத்தை முன்னோக்கிப் பார்த்து நாம் அனைவரும் ஒன்றாக இதற்கு மேலும் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியது என்றும் அவர் சொன்னார்.

