தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10,000 பேரின் கைவண்ணத்தில் எஸ்ஜி60 சுவரோவியம்

1 mins read
4c10e84d-0fa6-4dde-81b3-93f3dd8a421e
சுவரோவியத்தைப் பார்வையிட்ட பாலர் பள்ளி மாணவர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10,000 பேரின் கைவண்ணத்தில் புரோமனாட் எம்ஆர்டி நிலையத்தில் பெரிய சுவரோவியம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுவரோவியம் தீட்டியவர்களில் கிண்டர்லேண்ட் அனைத்துலகக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பாலர் பள்ளி மாணவர்கள், கல்வியாளர்கள் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் அடங்குவர்.

147 கிலோ பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்களை மறுபயனீடு செய்து அந்தப் பெரிய சுவரோவியம் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் சுவரோவியத்தில் சிங்கப்பூரின் முக்கியச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூரை நிறுவிய சார் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் , சம்சுவீ மகளிர், கச்சாங் புத்தே வியாபாரி ஆகியோர் அதில் அடங்குவர். இந்த எஸ்ஜி60 கலைத் திட்டத்துக்கு பில்டிங் அவர் நேஷன் ஒவர் ஜெனரேஷன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் புதன்கிழமை (ஜூலை 2) அறிமுகப்படுத்தப்பட்டது.13.5 மீட்டர் அகலம், 2.1 மீட்டர் உயரத்தில் உள்ள சுவரோவியம், மறுபயனீடு செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களால் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள ஆகப் பெரிய சுவரோவியம் என்று நம்பப்படுகிறது. கோ கிரீன் எஸ்ஜியின் ஆதரவால் சுவரோவியம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுவரோவியத்தின் அறிமுக விழாவில் சுவரோவியத்தின் இறுதி பாகத்தை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திருவாட்டி கோ ஹான் யான் பொருத்தினார்.

குறிப்புச் சொற்கள்