சிங்கப்பூர் நாணயச்சாலை நாட்டின் 60ஆம் ஆண்டுப் பிறந்தநாளையொட்டி புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது.
24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட நினைவுப்பதக்கம், வெள்ளிப் பதக்கம், உடைகளில் அணிந்து கொள்ளக்கூடிய வண்ணமிகு ஊசிகள், ஒரு கிராம் தங்க வில்லை முதலியவை தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்புச் சின்னமான ‘ஆகஸ்ட் த மெர்லைனை’ (August the Merlion) ஊசிகளிலும் வில்லையிலும் காணமுடியும்.
சிங்கப்பூரின் பயணத்தைக் கட்டமைத்த முக்கிய தருணங்களும் சின்னங்களும் புதிய தொகுப்பு வெளிவரத் தூண்டுதலாய் இருந்ததாக நாணயச்சாலை தெரிவித்துள்ளது.
தலைமுறை தலைமுறையாகச் சிங்கப்பூரர்களின் பெருமையையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
எஸ்ஜி60 கொண்டாட்டத் தொகுப்பை இதற்கு முன்னர் நாணயச்சாலை இவ்வாண்டு மார்ச் மாதம் வெளியிட்டது.
சிங்கப்பூர் பூமலை இடம்பெற்றுள்ள பதக்கங்களும் புதிய தொகுப்பில் இருக்கின்றன.
சிங்கப்பூர் பறவைத் தொடர் பண நோட்டுகளைத் தொடர்ந்து நாணயச் சாலை உருவாக்கி உள்ளது
தொடர்புடைய செய்திகள்
பணநோட்டுகள் 1976ஆம் ஆண்டுக்கும் 1984க்கும் இடையில் வெளியிடப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில் தேசத்தின் வலிமை, தகவமைப்பு, சுதந்திரப்போக்கு முதலியவற்றைப் பணநோட்டுகளில் இருக்கும் பறவைகள் பிரதிபலிக்கின்றன.

