தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$10க்கு எஸ்ஜி60 சிறப்புப் பதிப்பு நெட்ஸ் அட்டை

1 mins read
4bc34098-5f9f-4791-bd51-d8846527e15c
இந்த அட்டையில் சிங்கப்பூரின் அடையாளச் சின்னங்களான கரையோரப் பூந்தோட்டம் மற்றும் மரினா பே சேண்ட்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. - படம்: நெட்ஸ்

ஜூலை 14 முதல் சிறப்புப் பதிப்பு எஸ்ஜி60 நெட்ஸ் ஃபிலஷ்பே அட்டை விற்பனைக்கு விடப்படுகிறது.

சிங்கப்பூரின் 60வது சுதந்திர ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த அட்டை, கரையோரப் பூந்தோட்டம் மற்றும் மரினா பே சேண்ட்ஸ் போன்ற நாட்டின் அடையாளச் சின்னங்களால் ஈர்க்கப்பட்ட துடிப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இது “ஒற்றுமை, மீள்தன்மை மற்றும் பகிரப்பட்ட நினைவுகளின் சின்னம்,” என்று நெட்ஸ் கூறியது.

$10க்கு விற்கப்படும் ஒவ்வொரு அட்டைக்குள் $5 மதிப்புள்ள தொகை அடங்கியிருக்கும்.

அவை செவன்-இலேவன் கடைகள், சிம்பிலிகோ கூடங்கள், எஸ்எம்ஆர்டி பயணிகள் சேவை நிலையங்கள், டிரெவலெக்ஸ் வெளிநாட்டு நாணய மாற்றுக் கடைகள் ஆகியவற்றில் கிடைக்கும்.

ஜூலை 18ஆம் தேதி முதல் அந்த அட்டைகள், கால்டெக்ஸ், ஷெல், எஸ்பிசி பெட்ரோல் நிலையங்கள், பஸ் (Buzz) பல்பொருள் அங்காடிகள், ஜேபிஐ (JBI) வர்த்தகக் கடைகள், சன்ஷைன் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றிலும் விற்பனையாகும்.

குறிப்புச் சொற்கள்
நெட்ஸ்ரயில்பயண அட்டை

தொடர்புடைய செய்திகள்