ஜெம் கடைத்தொகுதியில் ‌‌‌‘ஷா தியேட்டர்’ திரையரங்கு

ஜெம் கடைத்தொகுதியில் ‌‌‌‘ஷா தியேட்டர்’ திரையரங்கு

1 mins read
a595fe33-0079-45a9-97ff-50f824645606
ஜெம் கடைத்தொகுதியில் அதன் எட்டாவது திரையரங்கைத் திறந்தது ‌‌‌ஷா தியேட்டர். - படம்: ‌‌‌ஷா தியேட்டர் ஜெம்

சிங்கப்பூரில் திரைப்பட நிறுவனமான ‌‌‌ஷா தியேட்டர்ஸ் ஜெம் கடைத்தொகுதியில் அதன் எட்டாவது திரையரங்கைத் திறந்துள்ளது.

ஜேகியூப் கடைத்தொகுதி மறுமேம்பாட்டுக்காக மூடப்பட்டபோது அங்குச் செயல்பட்ட ‌‌‌ஷா தியேட்டர் திரையரங்கு 2023ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதையடுத்து இப்போது மீண்டும் தீவின் மேற்குப் பகுதியில் அது கால் பதித்துள்ளது.

‌‌‌ஷா தியேட்டார் மேற்குப் பகுதிக்கு மீண்டும் வருவதுகுறித்து மே மாதம் அறிவித்தது.

மார்ச் மாதம் நிரந்தரமாக மூடிய முன்னாள் கேத்தே திரையரங்கிற்குப் பதிலாக புதிய ‌‌‌ஷா தியேட்டர் மூடப்பட்டது.

புதிய வளாகத்தில் பத்து திரையரங்குகள் இருக்கும். அவற்றுள் ஐமேக்ஸ் திரையரங்கும் ஒன்று.

பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு ‘டிரீமர்ஸ்’ திரையரங்கும் உள்ளது.

அந்தத் திரையரங்கில் ஐந்து மீட்டர் நீளமான சறுக்கு, 17 சதுர மீட்டர் பந்துகள் கொண்ட விளையாட்டு இடம் ஆகியவை இருக்கும்.

திரையரங்கின் திறப்பு நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக திரைப்படத்திற்குச் செல்வோருக்குத் திங்கட்கிழமை (ஜூன் 29) இலவச சால்டட் கேரமல் போப்கோர்ன் ஜெலாட்டோ வழங்கப்படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

முதல் 150 பேருக்கு மட்டும் அந்த ஜெலாட்டோ இலவசமாக வழங்கப்படும்.

‘டிரீமர்’ திரையரங்கிற்கான நுழைவுச்சீட்டுகளில் $2 கழிவும் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்