இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரங்களைப் பொறுத்தவரை, தமது கருத்துகளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் செங்கின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று மிகவும் முரண்படுவதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை மாருஃப் பள்ளிவாசலில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், “இஸ்ரேல், பாலஸ்தீன் குறித்து நான் கொண்டுள்ள பார்வை, திரு கெல்வின் செங்குடன் மிகவும் மாறுபடுகிறது,” என்று கூறினார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் பாலஸ்தீனர்களை அடக்கும் வகையில் உள்ளவை என்றும் தாம் நவம்பர் 2023ல் முன்னதாகச் சொல்லியிருந்ததாக அமைச்சர் சண்முகம் கூறினார்.
மார்ச் 13ஆம் தேதியன்று திரு செங் இட்ட ஃபேஸ்புக் பதிவில், “காஸாவுக்காகக் குரல்கொடுக்கும் சிலரை அங்கேயே அனுப்புத் தாயார்,” என்று கூறியிருந்தார்.
அப்பதிவு குறித்து அமைச்சர் சண்முகம் விவரிக்கவில்லை.
“நான் எல்லாவற்றையும் தொடர்ந்து படிப்பதில்லைவில்லை. பல்வேறு விவகாரங்களைப் பற்றிய கருத்துகளை திரு கெல்வின் செங் வெளியிடுகிறார். நான் பார்த்தவரையில் சில பதிவுகளுடன் உடன்படுகிறேன், சில பதிவுகளுடன் உடன்படுவதில்லை,” என்று திரு சண்முகம் கூறினார்.
பதிலுக்குப் பதில் இடப்பட்ட பதிவுகளைத் தாம் பார்க்கவில்லை என்றாலும் உண்மையை மொழிவது நன்று என்று திரு சண்முகம் குறிப்பிட்டார். இஸ்ரேல்- பாலஸ்தீன் நிலவரம் குறித்த கவனமாகக் கருத்துரைக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.