தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

42 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படும் ‘ஷாடெக்’

1 mins read
fc514d1b-b068-4ccc-b725-f87a5058df77
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ‘ஷாடெக்’ இதுவரை வழங்கி வந்த அனைத்துப் பயிற்சிகளும் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

கடந்த ஏறத்தாழ 42 ஆண்டுகளாக விருந்தோம்பல் துறைக்கான பயிற்சிகளை அளித்து வந்த ‘ஷாடெக்’ பயிற்சிக் கழகம் மூடப்படுகிறது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தனது செயல்பாடுகளை அது படிப்படியாகக் குறைத்து வருவதாக சாவ்பாவ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

பயிற்சிக் கழகத்தைத் தொடர்ந்து நடத்த சிரமப்படுவதால் ஷாடெக் இந்த முடிவுவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

புக்கிட் பாத்தோக்கில் உள்ள அதன் வளாகம் கடந்த மே மாதம் $18 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

‘டுவரிசம் கோர்ட்’டில் உள்ள அதன் ஆர்ச்சர்ட் வளாகம் இவ்வாண்டு ஜூன் மாத இறுதியில் மூடப்பட்டது.

‘ஷாடெக்’கின் பிரதான வளாகம் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 22ல் அமைந்துள்ளது.

அந்த வளாகத்தில் பயிற்சிகள் தொடர்கின்றன. ஆனால் அவை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அனைத்துப் பயிற்சிகளும் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஷாடெக்’ பயிற்சிக் கழகம் 1983ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

அதில் இதுவரை ஏறத்தாழ 40,000 பேர் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்களில் பலர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணம், ஹோட்டல் துறைகளில் தலைமைப் பதவி வகிப்பதாக சாவ்பாவ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்