ஜெம் கடைத்தொகுதிக்கு வருகிறது ஷா தியேட்டர்ஸ்

1 mins read
788144ee-a692-460d-9bb8-8b247d579877
ஷா தியேட்டர்ஸ் திரையரங்கிற்கான அதிகாரபூர்வத் திறப்பு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. - படம்: சாவ்பாவ்

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ஜெம் கடைத்தொகுதியில் முன்னதாக கேத்தே சினிபிளெக்ஸ் பயன்படுத்திய 47,000க்கும் அதிக சதுர அடி பரப்பளவிலான திரையரங்க இடத்தை ஷா தியேட்டர்ஸ் பயன்படுத்தவுள்ளது.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஷா தியேட்டர்ஸ் பேச்சாளர், “ஜெம் ஓர் அற்புதமான கடைத்தொகுதி. எங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களை வழங்க நாங்கள் செயல்படுவோம்,” என்றார்.

அதிகாரபூர்வத் திறப்பு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் ஷா தியேட்டர்சின் எட்டாவது கிளையாக இது இருக்கும். 2024 டிசம்பரில் சிலேத்தார் மால் கிளையை ஷா தியேட்டர்ஸ் மூடியது. 2023 ஆகஸ்ட்டில் ஜூரோங் ஈஸ்ட்டில் ஷா தியேட்டர்சின் ஜேகியூப் கிளையும் தனது கதவுகளை மூடியது.

“ஜூரோங் ஈஸ்ட்டுக்கும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களுக்கும் சேவையாற்ற நாங்கள் ஆவலுடன் உள்ளோம்,” என்று ஷா தியேட்டர்ஸ் பேச்சாளர் சொன்னார்.

எம்எம்2 ஏஷியா குழுமத்துக்குச் சொந்தமான கேத்தே சினிபிளேக்ஸ், வாடகை செலுத்தத் தவறியது. இதனால் ஜெம் கடைத்தொகுதி உரிமையாளரான லேண்ட்லீஸ், வாடகை பாக்கிக் கட்டணமாக ஏறக்குறைய $4.3 மில்லியனை மீட்க முனைகிறது.

குறிப்புச் சொற்கள்