தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தென்கிழக்காசியாவின் ஆக மதிப்புமிக்க நிறுவனம்

டிபிஎஸ் வங்கியை முந்தியது ஷாப்பி உரிமையாளர் ‘சீ’

1 mins read
f7f2c44a-4380-477b-bb40-087611f47a63
2024ன் தொடக்கத்திலிருந்து, முதலீட்டாளர்கள் இந்த வட்டாரத்தில் அதன் பலம் குறித்து அதிக நம்பிக்கை கொண்டதால், ‘சீ’ நிறுவனத்தின் பங்கு விலைகள் நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தன. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரின் ‘சீ’ நிறுவனம், தனது இணைய வணிகப் பிரிவான ஷாப்பி மூலம் 300 விழுக்காடு வளர்ச்சியடைந்து, டிபிஎஸ் குழுமத்தை முந்தி, தென்கிழக்காசியாவின் ஆக மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் தனது பட்டத்தை நிலைநிறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) ‘சீ’ நிறுவனத்தின் பங்குகளின் விலை 1.1 விழுக்காடு உயர்ந்ததைத் தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு US$111 பில்லியனாக (S$143 பி.) இருந்தது.

சில மணி நேரத்துக்குப் பிறகு, சிங்கப்பூரில் டிபிஎஸ் பங்குகளின் விலை செவ்வாய்க்கிழமை 0.6 விழுக்காடு சரிந்ததையடுத்து, அதன் மதிப்பு US$110.3 பில்லியனாகக் குறைந்தது. இதனால், முதலிடத்தை ‘சீ’ நிறுவனத்திடம் அதிகாரபூர்வமாக விட்டுக்கொடுத்தது.

2024ன் தொடக்கத்திலிருந்து, முதலீட்டாளர்கள் இந்த வட்டாரத்தில் அதன் பலம் குறித்து அதிக நம்பிக்கை கொண்டதால், ‘சீ’ நிறுவனத்தின் பங்கு விலைகள் நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தன.

இதற்கிடையில், 2024ன் தொடக்கத்திலிருந்து டிபிஎஸ் வங்கி பங்கு விலைகள் 65 விழுக்காடு உயர்ந்து சாதனை அளவை எட்டின. கடன், சொத்து மேலாண்மை வருமானம் இரண்டினாலும் உந்தப்பட்ட வலுவான வருவாய்க்குப் பிறகு, ஈவுத்தொகை அதிகரிப்பு, பங்குகளைத் திரும்பப் பெறுதல் மூலம் முதலீட்டாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலரைத் திரும்பத் தருவதாக டிபிஎஸ் உறுதியளித்தது.

குறிப்புச் சொற்கள்