தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வார இறுதிகளில் வட்ட ரயில் பாதை நிலையங்களிடையே இடைவழிப் பேருந்துச் சேவை

2 mins read
dd070a09-e344-4077-bda3-ea042068eaad
வட்ட ரயில் பாதை கட்டமைப்பின் ஒருங்கிணைப்பைச் சோதனையிட ரயில் சேவை தொடங்கும் நேரம், வார இறுதிகளில் காலை 9 மணிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

வட்ட ரயில் பாதைகளில் உள்ள பெரும்பாலான நிலையங்களிடையே செப்டம்பர் 6ஆம் தேதியிலிருந்து இடைவழிப் பேருந்துச் சேவை வழங்கப்படும்.

அந்த ரயில் பாதையில் வார இறுதிகளில் ரயில் சேவை காலை 9 மணிக்குத்தான் தொடங்கும்.

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்ட நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

அதற்கு முன்பு, வட்ட ரயில் பாதை கட்டமைப்பின் ஒருங்கிணைப்பைச் சோதனையிட ரயில் சேவை தொடங்கும் நேரம், வார இறுதிகளில் காலை 9 மணிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகாலை 5 மணியிலிருந்து காலை 9 மணி வரை இடைவழிச் சேவைப் பேருந்து எண் 36, 37 ஆகிய இரண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்று புதன்கிழமையன்று (செப்டம்பர் 3) எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

சில வார இறுதிகள் இதற்கு விதிவிலக்கு. அக்டோபர் 3லிருந்து 5ஆம் தேதி வரை, நவம்பர் 28லிருந்து 30ஆம் தேதி வரை, டிசம்பர் 5லிருந்து 7ஆம் தேதி வரை இடைவழிப் பேருந்துச் சேவை வழங்கப்படாது.

அந்த நாள்களில் ரயில் வழக்கநிலைக்குத் திரும்பும்.

இடைவழிச் சேவைப் பேருந்து எண் 36, ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்துக்கும் பீஷான் நிலையத்துக்கும் இடையே பேருந்துச் சேவை வழங்கப்படும்.

ஒவ்வொரு ஏழு முதல் பத்து நிமிடங்களுக்கு இடைவெளியில் இச்சேவை வழங்கப்படும்.

இடைவழிச் சேவைப் பேருந்து எண் 37, பீஷான் நிலையத்துக்கும் புரோமனாட் நிலையத்துக்கும் சேவை வழங்கும்.

இச்சேவை ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் வழங்கப்படும்.

ரயில் பயணத்துக்குச் செலுத்தப்படும் அதே கட்டணத்தை இடைவழிச் சேவைப் பேருந்துகள் வசூலிக்கும்.

வட்ட ரயில் பாதையின் ஆறாவது கட்ட நிலையங்களில் மூன்று புதிய நிலத்தடி நிலையங்கள் உள்ளன.

அவை கெப்பல், கென்டோன்மண்ட் மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் ரோடு நிலையங்கள்.

ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தையும் மரினா பே நிலையத்தையும் அவை இணைக்கும்.

குறிப்புச் சொற்கள்