எஸ்ஐஏ தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் 20.6% அதிகரிப்பு

1 mins read
ac344776-7ccf-48f9-b54b-f8f6c8add181
திரு கோவின் சம்பளத் தொகுப்பில், $1.4 மில்லியன் அடிப்படைச் சம்பளம், $2.2 மில்லியன் போனஸ், $4.3 மில்லியன் எஸ்ஐஏ பங்குகள், கிட்டத்தட்ட $148,000 பெறுமான அனுகூலங்கள் ஆகியவை அடங்கியுள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோ சூன் பொங்கின் சம்பளம், 2024ஆம் நிதியாண்டுக்கு 20.6 விழுக்காடு அதிகரித்து $8.1 மில்லியனாக உள்ளது.

எஸ்ஐஏ சாதனை அளவாக ஆக அதிக வருமானத்தை ஈட்டியதைத் தொடர்ந்து, அவரின் சம்பள அதிகரிப்பு வந்தது.

திரு கோவின் மொத்தச் சம்பளத் தொகுப்பில், $1.4 மில்லியன் அடிப்படைச் சம்பளம், $2.2 மில்லியன் போனஸ், $4.3 மில்லியன் எஸ்ஐஏ பங்குகள், கிட்டத்தட்ட $148,000 பெறுமானமுள்ள அனுகூலங்கள் ஆகியவை அடங்கியுள்ளதாக ஜூலை 1ஆம் தேதி நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை தெரிவித்தது.

எஸ்ஐஏ சாதனை அளவாக $2.7 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது. அது, முந்தைய ஆண்டின் $2.2 பில்லியனைக் காட்டிலும் 24 விழுக்காடு உயர்வு.

எஸ்ஐஏ, இதற்கு முன்பு தகுதிபெறும் ஊழியர்களுக்குக் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் போனஸ் வழங்கியது.

2023இன் நிதி ஆண்டுக்கு திரு கோவின் வருவாய் $6.7 மில்லியனாக இருந்தது. அதில், $1.1 மில்லியன் அடிப்படைச் சம்பளம், $3 மில்லியன் போனஸ், $2.5 மில்லியன் பங்குகள், $146,000 பெறுமானமுள்ள அனுகூலங்கள் ஆகியவை அடங்கியிருந்தன.

குறிப்புச் சொற்கள்