தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத் தெரிவுகளை அதிகரிக்க, எஸ்ஐஏ நிறுவனம் பிலிப்பீன்ஸ் ஏர்லைன்சுடன் இணைந்து செயல்பட இருக்கிறது

1 mins read
ce823977-ad6c-4e03-9615-5002df765f40
சிங்கப்பூருக்கும் மணிலாவுக்கும் இடையிலான எஸ்ஐஏ, பிஏஎல் விமானச் சேவைகளில் புதிய கூட்டுப் பகிர்வு ஒப்பந்தம் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) பிலிப்பீன்ஸ் ஏர்லைன்சுடன் (பிஏஎல்) புதிய கூட்டுப் பகிர்வு பங்காளித்துவ ஒப்பந்தத்தைத் தொடங்கியுள்ளது. அதன்வழி, பிலிப்பீன்சுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மட்டுமன்றி, மற்ற இடங்களுக்கும் செல்வதற்கான விமானத் தெரிவுகள் அதிகமாகும்.

சிங்கப்பூருக்கும் மணிலாவுக்கும் இடையிலான எஸ்ஐஏ, பிஏஎல் விமானச் சேவைகளில் புதிய கூட்டுப் பகிர்வு ஒப்பந்தம் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கும். 

இரண்டு விமான நிறுவனங்களும் கூட்டு அறிக்கை ஒன்றில் அதனைத் தெரிவித்தன.

இத்தகைய ஒப்பந்தத்தின் மூலம், விமான நிறுவனங்கள் ஒன்று மற்றொன்றின் விமானங்களில் உள்ள இருக்கைகளை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்துகொள்ளமுடியும். அதோடு, பயணிகளுக்குக் கூடுதல் பயணத் தெரிவுகளும் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்