ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து 2025 அக்டோபர் 13ஆம் தேதி, சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 71 வயது பயணி ஒருவர் நாடித்துடிப்பின்றி இருக்கையில் சரிந்த நிலையில் காணப்பட்டார்.
தமது சக ஊழியர் இட்ரிஸ் அபுவின் உதவியுடன் அவருக்கு உடனடியாக இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்து மூத்த சிப்பந்தி செரின் கோ அவரது உயிரை மீட்டார்.
அந்நேரத்தில் உள்சேவை மேலாளர் குவே ஜூ டொங்கிடம் இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவி (எஇடி / டிஃபிப்ரில்லேடர்)போன்ற மருத்துவ உபகரணங்களை எடுத்துவரும்படி கேட்டுக்கொண்ட செரின், அதனையும் ஆடவர் மூச்சு விடும்வரை பயன்படுத்தியுள்ளார்.
அந்த மூன்று விமானச் சிப்பந்திகள் உட்பட 29 ஊழியர்களுக்கும் இதர குழுக்களுக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியின் சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) சிங்கப்பூர் எடிஷன் ஹோட்டலில் நடந்த எஸ்ஐஏ நற்சேவை விருது விழாவில் நடந்தது.
சம்பவம் நடந்தபோது, விமானத்தில் இருந்த மற்ற 10 சிப்பந்திகளின் உதவியுடன் பயிற்சி பெற்ற இரு முதலுதவியாளர்களும் இரு மருத்துவர்களும் அடையாளம் காணப்பட்டனர். அவசர உதவியில் எஸ்ஐஏ சிப்பந்திகளுக்கு அவர்களும் உதவியுள்ளனர்.
நோயுற்ற அந்தப் பயணியின் மனைவி அவருடன் இருந்துள்ளார். திருவாட்டி கோவுடன் அங்கிருந்த மருத்துவர்களில் ஒருவரும் சிபிஆர் உதவியை வழங்க உதவினார்.
ஏற்றதாழ 20 நிமிடங்கள் அவர்கள் சிபிஆர் செயல்முறையையும் எஇடி இயந்திரத்தை பயன்டுத்தியும் முதலுதவி வழங்கியதால் ஆடவரின் நாடித் துடிப்பு மீண்டும் வரத்தொடங்கியது.
விமான நிலையத்தில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் பிறகு அந்த ஆடவரை விமானத்தில் இருந்து வெளியேற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 26 ஆண்டுகளாக எஸ்ஐஏ நிறுவனத்தில் பணியாற்றும் 48 வயதான திருவாட்டி கோ, வேலை நேரத்தில் அவசர சிபிஆர் சிகிச்சை அளிப்பது இதோடு மூன்றாவது முறை என்று குறிப்பிட்டார்.


