விமானத்தில் புகை எழுந்ததால் புறப்பட்ட இடத்துக்கு எஸ்ஐஏ திரும்பியது

விமானத்தில் புகை எழுந்ததால் புறப்பட்ட இடத்துக்கு எஸ்ஐஏ திரும்பியது

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக எஸ்ஐஏ விமானத்தில் புகை
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2026 - 7:24 pm

1 mins read

விமானத்தின் உள்ளறையில் புகை எழுந்ததால் ஆஸ்திரேலியாவின் ராக்ஹாம்ப்டன் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் ஆறு நாள்களுக்கு பிறகு, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) மீண்டும் புகை கண்டறியப்பட்டதால் அதே விமான நிலையத்திற்குத் திரும்பியது.

இரண்டு விமானிகள் உட்பட விமானத்தில் ஏழு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களே இருந்தனர் என்றும் பயணிகள் யாரும் இல்லை என்றும் எஸ்ஐஏ தெரிவித்துள்ளது.

குவீன்ஸ்லாந்தில் உள்ள ராக்ஹாம்ப்டனிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணிகளின்றி இயக்கப்பட்ட அந்த ஏர்பஸ் ஏ350-900 (9வி-எஸ்எச்ஏ) விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உள்ளறையில் புகை கண்டறியப்பட்டதால் மீண்டும் தரையிறங்கியது.

‘ஃபெர்ரி ஃபிளைட்’ என்பது, பொதுவாக விமானத்தை வேறு இடத்திற்கு நிலைநிறுத்துவதற்காகவோ அல்லது பராமரிப்புப் பணிகளுக்காகவோ, பயணிகள் அல்லது சரக்குகள் எதுவுமின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விமானத்தை இயக்குவதைக் குறிக்கும்.

இந்நிலையில், புகைக்கான காரணத்தை எஸ்ஐஏ விசாரித்து வருகிறது.

முன்னதாக நவம்பர் 11ஆம் தேதி, பிரிஸ்பேனிலிருந்து சிங்கப்பூர் வந்த எஸ்கியூ236 விமானத்தில் 289 பயணிகள் இருந்தபோது, இதேபோல் புகை ஏற்பட்டதால் ராக்ஹாம்ப்டனில் விமானம் தரையிறக்கப்பட்டது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று எஸ்ஐஏ பேச்சாளர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

ராக்ஹாம்ப்டன் விமான நிலையத்தில் பொறியாளர்களின் சோதனைக்குப் பிறகு, விமானம் சேவைக்கு அனுமதிக்கப்பட்டு கெய்ர்ன்ஸ் வழியாகச் சிங்கப்பூருக்குப் புறப்பட்டதாகவும் வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்றும் எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்