நியூயார்க்கிற்குப் புறப்பட்ட எஸ்ஐஏ விமானம் சிறிது நேரத்தில் சிங்கப்பூர் திரும்பியது

நியூயார்க்கிற்குப் புறப்பட்ட எஸ்ஐஏ விமானம் சிறிது நேரத்தில் சிங்கப்பூர் திரும்பியது

1 mins read
e116f57c-b727-47a3-bb02-9266c63a1729
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள். - கோப்புப் படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சாங்கி விமான நிலையத்துக்குத் திரும்பியது.

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த ‘எஸ்கியூ22’ விமானம் கோளாறு காரணமாக சாங்கி விமான நிலையத்துக்குத் திரும்பியதாக எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) பதிலளித்தார்.

புதன்கிழமை இரவு 11.35 மணிக்குச் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அவ்விமானத்தின் நீரியல் முறையில் கோளாறு ஏற்பட்டதால் பிரச்சினை எழுந்ததாக அவர் பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மேல்விவரங்களை அளித்தார்.

நீண்டநேரப் பயணங்களை மேற்கொள்ளும் ஆற்றல் கொண்ட அந்த ஏர்பஸ் ஏ350-900 வகை விமானம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதிகாலை சிங்கப்பூர் திரும்பியதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

எஸ்கியூ22, பொதுவாக 18 மணிநேரத்துக்கும் மேல், கிட்டத்தட்ட 16,700 கிலோமீட்டருக்கும் அதிகமாகச் செல்லக்கூடியது. அது, உலகளவில் இடைவிடாமல் மிக அதிக நேரம் பயணம் மேற்கொள்ளக்கூடிய பயணிகள் விமானங்களில் ஒன்றாகும்.

மாற்று விமானச் சேவைக்காகவும் அடுத்ததாகப் பணியில் ஈடுபடவிருந்த விமானச் சிப்பந்திகளுக்காகவும் காத்திருந்த பயணிகளுக்கு உணவுப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்எஸ்ஐஏசிங்கப்பூர் ஏர்லைன்ஸ்நியூயார்க்அமெரிக்காவிமானம்பயணம்சாங்கி விமான நிலையம்