நேப்பாளத்தில் வன்முறை போராட்டங்கள் காரணமாக தலைநகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 9ஆம் தேதி நேப்பாளத்தின் காத்மாண்டுவிற்குச் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
SQ442 விமானம் முதலில் செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 6.50 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு, இரவு 9.32 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி இரவு 11.47) காத்மாண்டுவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சாங்கி விமான நிலைய விமானத் தகவல் வலைத்தளம் இப்போது விமானச் சேவை நிலையை ‘ரத்துசெய்யப்பட்டது’ என்று காட்டுகிறது.
அமைதியின்மை காரணமாக காத்மாண்டுவின் திரிபுவன் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக நேப்பாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முன்னதாக தெரிவித்தது.

