விஸ்தாராவின் அமெரிக்க விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

விஸ்தாராவின் அமெரிக்க விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

2 mins read
0a3c8fca-e3dc-42fc-a9ac-2e375a7bae34
எஸ்ஐஏ-டாடா குழுமம் கூட்டு நிறுவனமான விஸ்தாரா, அமெரிக்காவுக்கு நேரடி விமானச் சேவை தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

போயிங் 787 டிரீம்லைனர் விமானங்கள் குறித்த நேரத்தில் கிடைக்காததால் விஸ்தாரா இம் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

"தாமதம் குறித்து அமெரிக் காவுடன் ஒரு கட்டத்தில் பேச்சு நடத்தினோம்," என்று விஸ்தாரா வின் தலைமை நிர்வாகி வினோத் கண்ணன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

"போயிங் 787 விமானங்கள் ஒரே சமயத்தில் கிடைக்காமல் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்கக் கூடும். இதனால் அமெரிக்காவுக் கான நேரடி விமானச் சேவை களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.

விஸ்தாரா, சிங்கப்பூரின் எஸ்ஐஏ, இந்தியாவின் டாடா குழுமம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும்.

எஞ்சிய நான்கு டிரீம்லைனர் விமானங்களும் 2024 மார்ச் மாதத்திற்குள் கிடைக்கும் என விஸ்தாரா எதிர்பார்க்கிறது. அவற்றில் முதல் விமானம் வருகிற ஏப்ரல் மாதம் விநி யோகிக்கப்படுகிறது.

"இதர போயிங் விமானங்கள் எப்போது கிடைக்கும் என்பதற்கான விளக்கத்திற்கு காத்திருக்கிறோம்," என்று கண்ணன் தெரிவித்தார்.

சென்ற ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் 787 விமானங்களை மீண்டும் விற்பனை செய்ய பச்சை கொடி காட்டியது.

கடந்த 2020 பிற்பகுதியில் அத்தகைய விமானங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து 787 ரக விமானங்களின் விநியோகம் நிறுத்தப்பட்டன.

இருந்தாலும் ஏற்கெனவே சேவையில் இருந்த 787 ரக விமானங்கள் தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில் லண்டன், பாரிஸ், ஃபிராங்க்ஃபர்ட் போன்ற குறைந்த விமானங்கள் தேவைப் படுகின்ற நகரங்களுக்கு விமானச் சேவைகளை வழங்க விஸ்தாரா திட்டமிட்டுள்ளது.

மும்பை போன்ற இந்தியாவின் இதர பகுதிகளுடன் அனைத்துலக நகரங்களை இணைக்கும் விமானச் சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் கண்ணன் மேலும் தெரிவித்தார்.

விஸ்தாரா நிறுவனம் தற்போது மூன்று 787 ரக விமானங்களை சேவையில் வைத்துள்ளது. அவற்றில் ஒன்று பயன்படுத்தப்பட்ட விமானமாகும். மூன்று ஆண்டு குத்தகைக்கு அது எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிறுத்தாமல் அமெரிக்காவுக்கு நிறுத்தமில்லா விமானச் சேவைகளை வழங்குவதால் மற்ற உள்ளூர் விமானங்களைவிட ஏர் இந்தியாவுக்குச் சாதமான அம்சம் உள்ளது.