சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு சிறந்த விமானச் சேவை நிறுவனம் எனும் அங்கீகாரம்

1 mins read
7c6d01b8-16cb-4169-a74e-452159409011
-

சென்ற ஆண்டின் சிறந்த விமானச் சேவை நிறுவனம் என்ற உயரிய அங்கீகாரம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. 49வது வருடாந்திர உலக விமானப் போக்குவரத்து நிகழ்ச்சியில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கிருமிப் பரவலின்போது அதற்கேற்ற வகையில் நிறுவனம் செயல்பட்டது. எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது விமானச் சேவைகளை மீண்டும் வழக்கநிலைக்கு திரும்ப அது உதவியாக இருந்தது.

கிட்டத்தட்ட 3,700 நிறுவனங்கள், நிபுணர்கள், உறுப்பினர்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த மதிப்புமிக்க பட்டியில் இடம்பிடித்தது.