2025ல் எஸ்ஐஏ விமானம் ஆட்டங்கண்டதை விமானிகளால் தடுக்க முடியவில்லை: ஆய்வறிக்கை

2025ல் எஸ்ஐஏ விமானம் ஆட்டங்கண்டதை விமானிகளால் தடுக்க முடியவில்லை: ஆய்வறிக்கை

அச்சம்பவத்தில் விமான ஊழியர்கள் காயமுற்றனர்
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

19 Oct 2026 - 10:10 am

1 mins read

சென்ற ஆண்டு பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் மோசமான வானிலை காரணமாக ஆட்டங்கண்டதில் அதன் ஊழியர் ஒருவரின் வலது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

எஸ்கியூ919 விமானத்தில் இருந்த இதர ஊழியர்கள் நால்வருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அச்சம்பவத்தின் விசாரணை முடிவுகளைப் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைக் குழு (டிஎஸ்ஐபி) அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வெளியிட்டது.

அக்குழு, போக்குவரத்து அமைச்சின்கீழ் செயல்படுகிறது.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது. அதில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும் விமானிகளால் விமானத்தை ஆட்டங்காணாமல் இருக்கச் செய்ய முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கை வார்களை அணிந்துகொள்ளுமாறு பயணிகளையும் விமான ஊழியர்களையும் கேட்டுக்கொண்டது, சீரான முறையில் மெதுவாக விமானத்தைச் செலுத்தியது போன்ற நடவடிக்கைகளை விமானிகள் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வறிக்கையின் முடிவுகளைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக எஸ்ஐஏ கூறியது. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அது பதிலளித்தது.

விமானம் ஆட்டங்காண்பதைக் கையாள்வது உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்பில் தங்களின் விமானிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் அடிக்கடி பயிற்சியும், வழிகாட்டுதல்களும் தகவல்களும் அளிக்கப்படுவதாக எஸ்ஐஏ குறிப்பிட்டது.

மேலும், இச்சம்பவத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஊழியர் இப்போது மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டதாக எஸ்ஐஏ சொன்னது.

2004லிருந்து 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குறைந்தது 11 விமானம் ஆட்டங்கண்ட சம்பவங்கள் நிகழ்ந்ததாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைக் குழுவின் பாதுகாப்பு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விமானிவிமானம்எஸ்ஐஏசிங்கப்பூர் ஏர்லைன்ஸ்வானிலை