போலி இணையத்தளம், சமூக ஊடக கணக்குகள் குறித்து எஸ்ஐஏ எச்சரிக்கை

1 mins read
0a74824f-c934-46be-afcd-c76a32403da6
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தன் பெயரைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அதன் வாடிக்கையாளர்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) எச்சரித்துள்ளது.

எஸ்ஐஏயின் பெயரில் பொதுமக்களுக்கு மோசடி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், சமூகக் கணக்குகள், தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து, பொதுமக்கள் விழிப்பாக இருக்கும்படி ‘எஸ்ஐஏ’ ஆகஸ்ட் 12ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.

கூகல் வரைபடங்கள், விக்கி பக்கங்கள், சமூக மன்றங்கள் உட்பட அனைத்து இணையப் பக்கங்களிலும் மோசடிக்காரர்கள் ‘எஸ்ஐஏ’ பெயரில் போலி நேரடித் தொலைப்பேசித் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளனர்.

உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்கள், அதிகாரபூர்வ ‘எஸ்ஐஏ’ இணையத்தளத்தில் உள்ள நேரடித் தொலைப்பேசித் தொடர்பு எண்களை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும் என எஸ்ஐஏ நிறுவனம் கேட்டுக்கொண்டது.

செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் செயலிகளில் ‘எஸ்ஐஏ’ நிறுவனத்தில் பணியாற்றுவது போல் ஆள்மாறாட்டம் செய்து, மோசடிப் பேர்வழிகள் போலியான வேலை வாய்ப்புச் செய்திகளுடன் பொதுமக்களை அணுகியுள்ளனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்ஐஏவில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் அதன் அதிகாரபூர்வ ‘லிங்ட்இன்’ பக்கம் அல்லது அதன் வாழ்க்கைத்தொழில் இணைய வாசலை அணுக வேண்டும் என்று விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்