தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘எஸ்ஐஏ’ 4 ஆண்டுகளுக்கு எஃப்1 கார் பந்தயத்தின் முதன்மை ஆதரவாளராகத் தொடரும்

1 mins read
190c6cd9-dc0f-494b-9dbc-550af231dec8
சென்ற ஆண்டின் ‘சிங்கப்பூர் கிராண்ட் பிரீ’ போட்டியில் மூன்றாவது இலவசப் பயிற்சியில் கலந்துகொண்ட மெக்லேரனின் லாண்டோ நோரிஸ். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) மேலும் நான்கு ஆண்டுகளுக்கு 2028 வரை, ஃபார்முலா ஒன் சிங்கப்பூர் கிராண்ட் பிரீயின் முதன்மை ஆதரவாளர் தகுதியைப் புதுப்பித்துள்ளது.

எஃப் 1 கார்ப் பந்தயத்துடனான ‘எஸ்ஐஏ’இன் பங்காளித்துவம் 2014ஆம் ஆண்டில் தொடங்கியது.

‘‘சிங்கப்பூர் கிராண்ட் பிரீ, சிங்கப்பூரின் விளையாட்டு, சுற்றுப்பயண நாள்காட்டியில் மிக முக்கிய நிகழ்வு. அது, முக்கிய உலக நடுவமாக சிங்கப்பூரின் நிலையைக் கோடிகாட்டுகிறது,’’ என்று ‘எஸ்ஐஏ’ தலைமை வர்த்தக அதிகாரி லீ லிக் சின் கூறினார்.

‘‘இந்த நீட்டிப்பு, சிங்கப்பூரின் விளையாட்டு, சுற்றுப்பயணத் துறைகளின் மேம்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க ‘எஸ்ஐஏ’ கொண்டுள்ள நீண்டகாலக் கடப்பாட்டை வெளிப்படுத்துகிறது,’’ என்றார் அவர்.

‘‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஃபார்முலா ஒன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீயின் முதன்மை ஆதரவாளராகத் தொடர்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி,’’ என்று ஃபார்முலா ஒன் தலைமை வர்த்தக அதிகாரி எமிலி பிராஸர் கூறினார்.

முதன் முதலில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, சிங்கப்பூர் கிராண்ட் பிரீ சுற்றுப்பயண ரசீதுகளில் $2 பில்லியன் ஈட்டி, சிங்கப்பூரின் பொருளியலுக்கு வலுசேர்த்தது. உலகளவில் ஒரு பில்லியன் பார்வையாளர்கள் அப்போட்டியைக் காண்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்