சிங்கப்பூரில் பெற்றோரால் துன்புறத்தப்பட்டு உயிரிழந்த இரண்டு வயதுச் சிறுமியின் சகோதரர்களுக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவை மாற்றுப் பராமரிப்பு ஏற்பாடுகளை வழங்கி வருகிறது.
அந்த இரண்டு வயதுச் சிறுமியைக் கொன்ற குற்றத்தை மறைக்க அவளுடைய பெற்றோர் அவளது உடலைப் பானை ஒன்றில் வைத்து எரித்தனர்.
குழந்தையைக் குடும்பத்தார் அல்லது நண்பர்களின் பராமரிப்பில் வைப்பது, தத்துப்பிள்ளை பராமரிப்பு, குழந்தைகள் இல்லம் ஆகியவை மாற்றுப் பராமரிப்பு ஏற்பாடுகளில் அடங்கும்.
குழந்தைப் பராமரிப்புச் சேவை, அவளுடைய சகோதரர்களுக்குத் தேவையான ஆதரவையும் கொடுத்து வருவதாக அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
அச்சிறுமியின் தாயார்மீதான வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வராததால் வழக்கு குறித்து மேல்விவரங்களை வெளியிடமுடியாது என அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
உமைஷா என்ற அச்சிறுமியைத் தவிர, அத்தம்பதியருக்கு மேலும் ஐந்து பிள்ளைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 19ஆம் தேதி, அச்சிறுமியின் தந்தைக்கு மொத்தம் 21.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

