சிங்கப்பூர் எதிர்க்கட்சிகளில் முக்கிய தலைமைத்துவ மாற்றங்கள்

சிங்கப்பூர் எதிர்க்கட்சிகளில் முக்கிய தலைமைத்துவ மாற்றங்கள்

1 mins read
4675b769-c2fe-4406-8adb-27cd3c149c9a
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஸ்டெஃபனி டான் (இடது) கட்சியிலிருந்து விலகிவிட்டார். மக்கள் சக்திக் கட்சியின் பொதுச் செயலாளர் கோ மெங் செங் தமது பதவியைவிட்டு விலகியுள்ளார்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் 2025ல் போட்டியிட்ட இரண்டு அரசியல் கட்சிகள் அண்மையில் அவற்றில் நடந்துள்ள தலைமைத்துவ மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை திங்கட்கிழமை (ஜூலை 6) வெளியிட்டன.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) நிர்வாகக் குழு உறுப்பினரான 38 வயதாகும் ஸ்டெஃபனி டான், கட்சியிலிருந்து விலகிவிட்டார். முதன்முறையாக அரசியலில் காலெடுத்து வைத்த அவர் பைனியர் தனித்தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் பேட்ரிக் டே அங்கு வெற்றிபெற்றார்.

பிஎஸ்பி கட்சி நான்கு தனித்தொகுதிகளில் போட்டியிட்டது. பைனியர் தனித்தொகுதியில் 34.55 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்று, அவரது கட்சியில் தனித்தொகுதிகளில் போட்டியிட்டோரில் ஆக அதிக வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.

மக்கள் சக்திக் கட்சியின் (பிபிபி) பொதுச் செயலாளராகப் பணியாற்றிய கோ மெங் செங், தலைவர் டெரிக் சிம் இருவரும் தத்தம் பதவியிலிருந்து விலகியுள்ளனர். நடந்த தேர்தலில் கட்சி அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று அவர்கள் அடுத்த தலைவர்களுக்கு வழிவிட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மக்கள் சக்திக் கட்சியின் புதிய தலைவராக அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிட்ட வில்லியம் லிம் லியான் சின் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்