ஏர் இந்தியாவின் உருமாற்றத்திற்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உறுதி

ஏர் இந்தியாவின் உருமாற்றத்திற்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உறுதி

2 mins read
ஏர் இந்தியா இழப்புகளால் பாதிக்கப்பட்டாலும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் காலாண்டு வருவாய் புதிய உச்சத்தைத் தொட்டு $5.5 பில்லியனாகப் பதிவாகியது.
ddf3baf3-5dce-40bb-b0fb-49f1dc5f5cf9
பயணிகள் போக்குவரத்து மிக வலுவாக இருந்தபோதிலும், ஏர் இந்தியாவின் நிதிச்சுமை, எஸ்ஐஏவின் கணக்குகளில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. - படம்: பெரித்தா ஹரியான்

ஏர் இந்தியா நிறுவனத்தின் உருமாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் டாட்டா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் உறுதியாக உள்ளது.

தற்போதைய நட்டங்கள் லாபத்தைக் குறைத்தாலும், நீண்டகால அடிப்படையில் இந்தியச் சந்தையில் வலுவான இடத்தைப் பிடிக்க இது உதவும் என்று எஸ்ஐஏ நம்புகிறது.

எஸ்ஐஏ இந்தக் காலாண்டில் $5.5 பில்லியன் வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இருப்பினும், ஏர் இந்தியாவுடனான அதன் கூட்டணி விரிவாக்கத்தால், எஸ்ஐஏவின் இறுதி லாபத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து மிக வலுவாக இருந்தபோதிலும், ஏர் இந்தியாவின் நிதிச்சுமை, எஸ்ஐஏவின் கணக்குகளில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

ஏர் இந்தியாவின் உருமாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் டாட்டா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எஸ்ஐஏ உறுதியாக உள்ளது.
ஏர் இந்தியாவின் உருமாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் டாட்டா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எஸ்ஐஏ உறுதியாக உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

எஸ்ஐஏவின் நிகர லாபம் $505 மில்லியனாகக் குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட $1,121 மில்லியன் (68.9%) குறைவாகும்.

எஸ்ஐஏ பங்காளித்துவ நிறுவனங்களின் இழப்பில் அதன் பங்கு கடந்த ஆண்டு $15 மில்லியனாக இருந்தது. தற்போது அது $178 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் ஒரு மாதகால நட்டம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு முழு காலாண்டின் (மூன்று மாதங்கள்) நட்டமும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா இணைப்பின்போது, ஏறத்தாழ $1.1 பில்லியன் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய லாபமாக எஸ்ஐஏவுக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு அதுபோன்ற கூடுதல் வரவு இல்லாததால், மொத்த லாபம் குறைவாகத் தெரிகிறது.

கூட்டணி நிறுவனங்களின் இழப்பு ஒருபுறம் இருந்தாலும், எஸ்ஐஏவின் நேரடி விமானப் போக்குவரத்துத் தொழில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வளர்ந்துள்ளது.

எரிபொருள் மற்றும் ஊழியர் செலவுகள் போக, விமானச் சேவை மூலம் கிடைத்த லாபம் 25.9 விழுக்காடு உயர்ந்து, $792 மில்லியனை எட்டியுள்ளது.

எஸ்ஐஏ, ஸ்கூட் விமானங்கள் மூலம் 10.9 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர். விமானங்களில் சராசரியாக 87.5% இருக்கைகள் நிரப்பப்பட்டு இயக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்