தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விமான விபத்தையடுத்து எஸ்ஐஏ பங்கு விலை 1.9 விழுக்காடு வீழ்ச்சி

2 mins read
789d5768-a30e-403a-9b63-c5a15b3638e0
ஏர் இந்தியா விமானம் ஒன்று நொறுங்கி வீழ்ந்ததில் குறைந்தது 265 பேர் உயிரிழந்ததை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஜூன் 13ஆம் தேதி குறைந்துள்ளது.

முந்தைய நாளில் ஏர் இந்தியா விமானம் ஒன்று நொறுங்கி வீழ்ந்ததில் குறைந்தது 265 பேர் உயிரிழந்ததை அடுத்து பங்கு விலை குறைந்தது.

ஏர் இந்தியாவின் பங்குகளில் 25.1 விழுக்காடு பங்குகளைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பங்குகளின் விலை, 13 காசு குறைந்து வெள்ளிக்கிழமை காலை 6.90 வெள்ளி பதிவானது.

இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 0.5 விழுக்காடு குறைந்தது. ஈரானில் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் புதிய பூசல்கள் நிலவக்கூடும் என்ற அச்சங்கள் நிலவுகையில் ஆசியப் பங்குச்சந்தைகள் இறக்கம் கண்டன. 

ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா நவம்பர் 2024ல் இணைந்ததை அடுத்து எஸ்ஐஏ நிறுவனம், ஏர் இந்தியாவின் பங்குதாரரானது.

இணைவதற்கு முன் டாட்டா சன்ஸ் நிறுவனமும் எஸ்ஐஏ நிறுவனமும் விஸ்தாரா நிறுவனத்தைக் கூட்டாக உரிமை கொண்டிருந்தன.

வேகமாக விரிவடைந்துவரும் இந்திய விமானத்துறையில் நேரடியாகப் பங்கேற்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வகைசெய்கிறது.

இந்தக் கூட்டுறவின்கீழ், எஸ்ஏஐ நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனமும் பரிமாறிக் கொள்ளும் விதமாக விமானச் சேவை எண்களைத் தத்தம் சேவைகளில் பகிர்கின்றன. 

இதற்கிடையே, இந்தக் காலகட்டத்தில் ஏர் இந்தியாவுக்கு முழு ஆதரவு தந்து தேவையான உதவிகள் அனைத்தையும் நல்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

“ஏஐ171 ஏர் இந்தியா விமானச் சேவையால் பாதிக்கப்பட்ட பயணிகள், சிப்பந்திகள் அனைவருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது,”  என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

குறிப்புச் சொற்கள்