தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகாயப்படைக்கு மீண்டும் உற்சாகத்தைக் கொண்டுவரும் ஆகாயக் காட்சி

1 mins read
68d505f8-ead5-4f3c-a5d0-0490fc696fb8
ஆகாயக் காட்சியின் வாரயிறுதி நாள்களில் 60,000க்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் கொவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சிங்கப்பூர் ஆகாயக் காட்சி’.

அந்நிகழ்ச்சி மீண்டும் புதுப்பொலிவுடன் 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிறது.

இவ்வாண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 25ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறவிருக்கும் இக்காட்சியில் கிட்டத்தட்ட 50,000 வர்த்தக பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இக்காட்சியை பிப்ரவரி 24ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 25ஆம் தேதி ஆகிய வார இறுதி நாள்களில் கண்டுகளிக்கலாம். அந்நாள்களில் சாங்கி கண்காட்சி நிலையத்திற்கு 60,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என முன்னுரைக்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டு நடந்த காட்சியைக் காண கிட்டத்தட்ட 80,000 பொதுமக்கள் வந்ததாக கூறப்படுகிறது.

50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 1000த்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்காட்சியில் கலந்துகொள்கின்றன.

சீன விமானத் தயாரிப்பு நிறுவனமான கோமேக், அதன் சி-919 ரக விமானம் சிங்கப்பூர் விமானக் காட்சியில் முதல்முறையாக இடம்பெற இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்